தொல்லியல் ஆய்வுகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது அரசு தமிழர் பண்பாட்டுக்கு துரோகம் செய்து வரும் எடப்பாடியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ பேட்டி
சென்னை: தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் துரோகம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமியைத் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக மருத்துவரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் எழிலன் கூறினார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: பள்ளிக்கூட ஆசிரியர் வி.பாலசுப்பிரமணியன் 1971ம் ஆண்டு கீழடி நாகரிகம் குறித்து சில ஆய்வுத் தரவுகளை எடுத்து கூறியதன் பின், அப்போதை ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தில் 2013-14ல் கீழடி ஆய்வு தளம் என ஏஎஸ்ஐக்கு ஒரு ரிப்போர்ட் சமர்பித்தது. 2014ல் பாஜ அரசு வந்தபின் அமர்நாத் தலைமையில் இரண்டு கட்ட அளவில் தொல்லியல் ஆய்வு நடத்தினர். 2016 முடியும் தருவாயில் அந்த ஆய்வை நிறுத்தி கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டார். அந்த ஆய்வை மூட சொன்னர்கள், ஏஎஸ்ஐ இதை நிறுத்தியதும் கனிமொழி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அந்த வரலாற்று சிறப்புமிக்க வழக்கில், எதற்காக ஆய்வுகளை நிறுத்தினீர்கள் என கேள்வி எழுப்பினர். பலரும் குரல் எழுப்பியதால் அதிமுகவினர் மீண்டும் வழக்கில் பதில் அளித்து, அதற்கு நாங்கள் உதவி செய்வதாக கூறினர். உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் எடப்பாடி அரசு கீழடி ஆய்வைத் தொடர்ந்தது.
திராவிட மாடல் முதல்வர் ஆட்சியில் கீழடி அகழாய்வு முழு அளவில் ஊக்குவிக்கப்பட்டது. அது குறித்த ஆய்வுமுடிவுகளைப் பற்றி முதல்முறையாக சட்டமன்றத்தில் பேசினார். நிதி ஒதுக்கீடு குறித்து தவறான தகவலை அதிமுகவினர் சொல்லியுள்ளனர், உதயகுமார் ரூ.55 லட்சம் ஒதுக்கியுள்ளதாக கூறினார். இன்றைக்கு மா.பா ரூ.105 கோடி ஒதுக்கியதாக கூறியுள்ளார். ஆனால் அதிமுக ஆட்சியில் இரண்டே இரண்டு அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டறை பரம்மத்தூரில் ரூ.5 லட்சம் ஒதுக்கினர். கீழடிக்கு ரூ.55 லட்சம் ஒதுக்கியுள்ளனர். ஒரு அப்படமான பொய்யாக ரூ.105 கோடி செலவு செய்ததாக சொல்லியுள்ளனர். ஆனால் நாம் மொத்தம் 30 இடங்களில் ஆய்வு செய்து 37 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு ரூ.27 கோடி ஒதுக்கினர். ரூ. 1 கோடி செலவு செய்த அதிமுக எங்கே? ரூ.27 கோடி செலவு திராவிட மாடல் அரசு எங்கே? 2016ல் கீழடி ஆய்வு நிறுத்தப்படும்போது ஏன் அதிமுக கண்டன குரல் ஏன் எழுப்பவில்லை? தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் துரோகம் செய்துவரும் எடப்பாடி பழனிசாமியைத தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.



