சென்னை : 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 26 பள்ளிகளுக்கு ரூ.5.20 கோடி நிதி வழங்கப்படும் என்றும் பள்ளியின் அனைத்து மின் தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.