ராமநாதபுரம்: ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று சொன்னாரே, செய்தாரா பிரதமர் மோடி? என்று கேள்வி எழுப்பினார். ரூ.15லட்சம் போடவில்லை; 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டுக்கு தந்த வாக்குறுதிகளை கூட பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014ல் ராமநாதபுரத்தில் பேசும்போது சொல்லிய வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை. ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலாத்தலமாக அறிவிப்பேன் என்று சொன்னார் அதை செய்தாரா பிரதமர்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார்.