திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெண்களுக்கான கூடுதல் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்து கலெக்டர் த.பிரபுசங்கர் கள ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளுர் மாவட்டத்தில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் திருத்தணி அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது. தற்பொழுது கூடுதலாக அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் நடைபெற உள்ளது.
ஒன் ஸ்டாப் மையங்கள், முலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது சமூக நலத்துறையால் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.ஆய்வின்போது அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, துணை முதல்வர் திலகவதி, மருத்துவமனை நிலைய அலுவலர் ராஜ்குமார், பொதுபணித்துறை செயற்பொறியாளர் விஜய்ஆனந்த், மாவட்ட சமூக நல அலுவலர் வாசுகி, மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.