புதுடெல்லி: அசாம் அரசின் கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர் வாரியம் கடந்த 2013-16ம் ஆண்டில் ரூ.118 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சம்மந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், துறை உயர் அதிகாரிகள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனைகள் நடந்த இடங்களை அமலாக்கத்துறை வெளியிடவில்லை. ஆனாலும் சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், மோசடி பணத்தில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.34.03 கோடி பணம் முடக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.