கோவை : கோவையில் பழுதடைந்த அரசுப் பேருந்தை ஆய்வு செய்யாமல் அனுப்பிய 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோவை ஒண்டிப்புதூர் கிளை மேலாளர், உதவி பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒண்டிப்புதூரில் பழுதடைந்த அரசுப்பேருந்து இயக்கப்பட்டது குறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.