திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி ஆந்திர மாநில அரசு பஸ் பயணிகளுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. சின்ன வரம்பாடு அருகே சென்றபோது எதிரே வந்த சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ேபருந்தில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.