திருவள்ளூர்: கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலக் குழு புதியதாக அமைக்க வேண்டி உள்ளதால் உறுப்பினர் தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலமக்களின் வளர்ச்சிக்காக பாடுபட விருப்பமுள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் 25ம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மனு அளிக்கவும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
Advertisement


