கரூர் :கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாட்டர் பெல் அடிக்கப்பட்டு மாணவர்கள் தண்ணீர் அருந்தி பழக்கப்படுத்திக் கொண்டனர்.தமிழகம் முழுதும் பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி, பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்தும் வகையில் காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் மாலை 3 மணி ஆகிய நேரங்களில் வாட்டர் பெல் அடித்து மாணவர்களை தண்ணீர் அருந்தும் பழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தொட்டியப்பட்டி நேற்று முதன் முறையாக மூன்று முறை வாட்டர் பெல் அடிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்தினர்.
இந்த நிகழ்வில், பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி கலந்து கொண்டு, குறிப்பிட்ட நேரங்களில் தண்ணீர் அருந்தினால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். சீரண உறுப்புகள் சிறப்பாக செயல்படவும் உதவும் என்ற அடிப்படையில் இந்த வாட்டர் பெல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாணவர்கள் மத்தியில் விளக்கிப் பேசினார்.
மேலும், மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு இந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் வாட்டர் பெல் அடித்த மாணவர்கள் குடிநீர் பருகும் முறை கடைபிடிக்கப்பட்டது.