சென்னை: கல்விக் கூடங்கள், மயானங்கள் உட்பட அரசு பொது நிறுவனங்களை பயன்படுத்துவதில் பாகுபாடு கூடாது என தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் புதிதாக கட்டப்படும் அரசு அலுவலகங்களும் அனைத்து மக்களுக்கும் சம தொலைவில் அமைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.