தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நேர பிரச்சனையால் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆண்டிபட்டி அடுத்த மயிலாடும்பாறை கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் தனியார் பேருந்து இயக்கப்பட்ட பிறகே அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்றைய தினமும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே அரசு பேருந்து இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நடு வழியில் அரசு பேருந்தை மறித்த தனியார் பேருந்து ஓட்டுநர் கடும் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது அரசு பேருந்து ஓட்டுநரும் சட்டையை கழற்றியபடி சண்டைக்கு வா என்று ஆக்ரோஷமாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்த மயிலாடும்பாறை போலீசார் ஓட்டுனர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஓட்டுநர்கள் பிரச்சனையால் பயணிகளளும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.