Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசு பேருந்து ஓட்டுநர்கள் நேரத்தை முறையாக கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: நேரத்தை முறையாக கடைபிடிக்காவிட்டால் அரசு பேருந்து டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஏ.சி. மற்றும் ஏ.சி. வசதி அல்லாத பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் என சுமார் 1,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு பேருந்துகள் நேர விரயம் காரணமாக அரசு பேருந்துகள் பயணிப்பதைவிட ஆம்னி பேருந்துகள் பயணிக்கவே பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்கு அரசு விரைவு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களே காரணம் என்று கூறப்படுகிறது.

அதாவது, அந்த பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் கிளை மேலாளர்கள் டீசல் சிக்கனத்திற்காக பேருந்தை வேகமாக ஓட்டக்கூடாது என்று தெரிவித்து இருப்பதாக பயணிகளிடம் கூறி தங்கள் தவறுகளை சமாளிக்கின்றனர். இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறியதாவது; அரசு விரைவு பஸ்களை டீசல் மிச்சம் பிடிப்பதற்காக குறைவான வேகத்தில் ஓட்டுமாறு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை. அதே நேரத்தில் வேகமாக ஓட்டி விபத்துக்குள்ளாக்காமல் பாதுகாப்பான முறையில் இயக்கி உரிய காலத்தில் குறிப்பிட்ட இலக்கை வந்தடையும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றே ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தங்கள் பயண அனுபவம் குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கான இணைப்பு ஒன்றும் அனுப்பப்படும். இந்த லிங்க் மூலம் பேருந்தின் காலதாமதம், சுத்தமின்மை, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் நடைமுறைகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் பேருந்தை இயக்காத ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.