தேவையானவை:
கவுனி அரிசி – 1 கப்,
வெல்லம் பொடித்தது – 1 கப்,
ஏலப்பொடி – ½ டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல், நெய், முந்திரி – தலா ½ கப்.
செய்முறை:
கவுனி அரிசியை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைத்து, ஊறிய பின் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பிறகு குக்கரில் ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விட்டு 3 (அ) 4 விசில் விடவும். ஆறியதும் எடுத்து உதிர்க்கவும். வாணலியில் நெய் விட்டு மற்ற எல்லாப் பொருட்களையும் ேசர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்ததும் இறக்கவும். சுவை மிக்க சத்தான கவுனி அரிசி அல்வா தயார்.