சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக 3 நாட்களில் சவரனுக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,360க்கு விற்கப்பட்டு புதிய உச்சத்தை கண்டது. ஒன்றிய பட்ஜெட்டில் தங்க இறக்குமதிக்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் தங்கம் விலை கிடுகிடுவென சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கு விற்கப்
பட்டது. சவரன் ரூ.51,920, 25ம் தேதி சவரன் ரூ.51,440, 26ம்தேதி சவரன் ரூ.51,320 என்றும் குறைந்து வந்தது.
அதன் பிறகு தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் காணப்பட்டு வருகிறது. கடந்த 30ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.51,080க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 31ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,360க்கு விற்கப்பட்டது. ஆக.1ம் தேதி ஒரு சவரன் ரூ.51,440க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் அதிகரித்து, அதாவது கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,460க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.51,680க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை தொடர்ச்சியாக சவரனுக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளது.