சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது. கடந்த 13ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.74,360 விற்பனையாகி புதிய உச்சத்தை பதிவு செய்தது. மறுநாள் இந்த புதிய உச்சம் முறியடிக்கப்பட்டது. அதாவது விலை மேலும் உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 18ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்துக்கு விற்பனையானது.
தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,120க்கும் விற்பனையானது. தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 வரை உயர்ந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,210க்கும், பவுனுக்கு ரூ.440 ரூபாய் குறைந்து ஒரு பவுன் ரூ.73,680க்கும் விற்பனையானது. அதேபோல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.