சென்னை: தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தையும் கண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 11ம் தேதி ஒரு பவுன் ரூ.64,480க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் வரலாறு காணாத உச்சமாகும். அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.7,890க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.63,120க்கும் விற்பனையானது.
வார இறுதி நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.