சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 3 நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. சில நேரத்தில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி ஒரு சவரன் ரூ.44,440க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 8ம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,320க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் குறைந்தது. நேற்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,505க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.44,040க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.