சென்னை: ஆடி மாதம் கடந்த 17ம் தேதி பிறந்ததில் இருந்தே தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக கண்ணாமூச்சி விளையாடி கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,024 வரை உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.44,280க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,552க்கும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,416க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,580க்கும், சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,640க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.