சென்னை: தங்கம் விலை நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ.43,840க்கு விற்கப்பட்டது. தமிழ்நாட்டில் தங்கம் விலை 9ம் தேதி சவரன் ரூ.44,080க்கு விற்கப்பட்டது. 11ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,120க்கு விற்கப்பட்டது. 12ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,160க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,480க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.43,840க்கும் விற்கப்பட்டது. இந்த மாதத்தில் திருமணம் உள்பட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ.43840க்கு விற்கப்பட்டது.