சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களில் சவரன் ரூ.560 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. 16ம் தேதி சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,240க்கு விற்கப்பட்டது. 17ம் தேதி விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,540க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,320க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,550க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,400க்கும் விற்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.560 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்காக நகை வாங்க காத்திருப்பவர்களை கவலையடைய செய்துள்ளது.