Saturday, June 22, 2024
Home » தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 எகிறியது: மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் நகை வாங்குவோர் கலக்கம்

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 எகிறியது: மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் நகை வாங்குவோர் கலக்கம்

by Karthik Yash

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. அதே நேரத்தில் மீண்டும் சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,800, 16ம் தேதி சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,360க்கும் விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலையில் திடீரென மாற்றம் காணப்பட்டது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,770க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.

நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,850க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,800க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

You may also like

Leave a Comment

sixteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi