சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக உள்ளது. சில நேரத்தில் தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. கடந்த 26ம் தேதி சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,416க்கு விற்கப்பட்டது. 27ம் தேதி சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,640க்கும விற்பனையானது. 28ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.44,400க்கும் விற்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட நீடிக்கவில்லை. 29ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,565க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,520க்கும் விற்கப்பட்டது. 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. 31ம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. 2ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு ரூ.160 குறைந்துரூ 4,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.8 குறைந்து ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.