சென்னை: தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 23ம் தேதி முதல் தொடர்ச்சியாக 11 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1888 வரை குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5410க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.43,280க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று மாலையில் தங்கம் விலை, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,510க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,080க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1104 உயர்ந்துள்ளது.