சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மாதத்தின் தொடக்க நாளான இன்றும் சவரனுக்கு ரூ.232 குறைந்தது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு அதிரடியாக தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டது. அதேபோல, இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 அதிரடியாக குறைந்தது. இதேபோல் நேற்று செவ்வாய்க்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.45,720-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,715-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.