சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்தது. கடந்த 12ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.53,440க்கு விற்கப்பட்டது. 13ம் தேதி ஒரு சவரன் ரூ.53,280, 14ம் தேதி சவரன் ரூ.53,200 என விலை குறைந்தது. கடந்த 15ம் தேதி சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,640க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,690க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.53,520க்கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது
91