சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்தது. தங்கம் விலை திடீரென நேற்று முன்தினம் மாலையிலும் 2வது முறையாக மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று முன்தினம் காலை நேரம் நிலவரத்தை காட்டிலும் கிராமுக்கு ரூ.110, பவுனுக்கு ரூ.880ம் உயர்ந்தது. அந்த வகையில், ஒரே நாளில், ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9060க்கும், ஒரு பவுன் ரூ.1,120 உயர்ந்து, பவுன் ரூ.72,480க்கும் விற்பனையானது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கம் அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது.
அதாவது கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,080க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,640க்கும் விற்பனையானது. கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை நேற்று உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.113க்கும் கிலோவுக்கு 2,000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.