Sunday, June 15, 2025
Home செய்திகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் வார இறுதிநாளில் தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1200 குறைந்தது

யாரும் எதிர்பார்க்காத வகையில் வார இறுதிநாளில் தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1200 குறைந்தது

by Karthik Yash

சென்னை: தங்கம் விலை நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1200 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி தங்கம்விலை காலை, மாலை என 2 முறை உயர்வை சந்தித்தது. அதாவது ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,060க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,480க்கும் விற்றது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கம் அடைய செய்திருந்தது. தொடர்ந்து, 3ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,640க்கு விற்பனையானது. 4ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,720, 5ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73,040க்கும் விற்றது.

தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 வரை உயர்ந்தது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு பவுன் ரூ.73,040க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வார இறுதிநாளான நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,980க்கும், பவுனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு பவுன் ரூ.71,840க்கும் விற்பனையானது.

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை ஜெட் வேகத்தில் குறைந்தது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. நேற்றைய விலையில் இன்று தங்கம் விற்பனையாகும். நாளை திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும். அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.117க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi