Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் விலை மேலும் சரிவு 2 நாளில் பவுனுக்கு ரூ.800 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த ஏப்ரல் 22ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து தங்கம் விலை குறைய தொடங்கியது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

அதை தொடர்ந்து, தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.8,935க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.71,480க்கு விற்பனையானது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்து.

அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,895க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.71,160க்கும் விற்பனையானது. தொடர்ந்து 2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 7வது நாளாக வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதாவது வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.111க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது.