சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1480 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 2ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.72,480க்கும் விற்றது. 3ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,640க்கும், 4ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,720க்கும், 5ம் தேதி பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73,040க்கும் விற்பனையானது. தொடர்ந்து 4 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 வரை உயர்ந்தது.
இந்நிலையில், 7ம் தேதி தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு பவுன் ரூ.71,840க்கு விற்றது. 9ம் தேதி தங்கம் விலை மேலும் குறைந்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.71,640க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை சற்று குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.8,945க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் ரூ.71,560க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,480 குறைந்துள்ளது. இந்த தொடர் விலை குறைவு நகைவாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.119க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000க்கும் விற்பனையானது.