சென்னை: தங்கம் விலை நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பவுனுக்கு ரூ.840 குறைந்தது. 14ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. இதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்திருந்தது. அதாவது கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.9,305க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.74,440க்கும் விற்பனையானது.
இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 குறைந்து ஒரு கிராம் ரூ.9,200க்கும், பவுனுக்கு ரூ.840 குறைந்து ஒரு பவுன் ரூ.73,600க்கும் விற்றது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனையானது.