சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 உயர்ந்தது. 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,920க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,360க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
தங்கம் விலையில் திடீர் மாற்றம் பவுனுக்கு ரூ.200 உயர்ந்தது
0