ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைபிரிவில் பங்கேற்ற அல்ஜீரிய வீராங்கனை இமேன் கெலிப் (25 வயது), பாலின சோதனையில் XY குரோசோம்கள் கொண்ட உயிரியல் ரீதியான ஆண் என உறுதி செய்யப்பட்டவர். இவர் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிக்கியதால், மகளிர் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்பட்டார். ஆனால், பாரிஸ் ஒலிம்பிக்கில் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
முதல் போட்டியிலேயே இமேன் கெலிப் விட்ட ஒரு பலமான குத்து இத்தாலியின் ஏஞ்சலா கரினியை நிலைகுலைய வைக்க, அவர் 46வது விநாடியிலேயே கதறி அழுதபடி போட்டியில் இருந்து விலகினார். மகளிர் பிரிவில் ஒரு ஆண் வீரர் பங்கேற்க எப்படி அனுமதிக்கலாம் என சர்ச்சை வெடித்தது. ஆனாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து களமிறங்கிய இமேன் கெலிப் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங் லியுவுடன் மோதிய இமேன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். அல்ஜீரியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் பாக்சர் என்ற பெருமைக்குரியவர் இமேன்.