குமி: ஆசிய தடகளப் போட்டியின் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. தென் கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 43 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். நேற்று நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கப்பதக்கமும் 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டியில் செர்வின் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இந்நிலையில் ஆசிய தடகளப் போட்டியின் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், சந்தோஷ், விஷால் அடங்கிய அணி தங்கம் வென்றது. தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 4 பேரில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தங்கம் வென்ற இந்திய அணியில் சுபா வெங்கடேசன், சந்தோஷ், விஷால் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
பிரவீன் சித்திரவேலுக்கு வெள்ளி
அதேபோல ஆசிய தடகளப் போட்டியின் மும்முனை தாண்டுதலில் பிரவீன் சித்திரவேலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மும்முனை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.