Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜுன்.18) அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 குறைந்து ஒரு கிராம் ரூ.9,200க்கும், பவுனுக்கு ரூ.840 குறைந்து ஒரு பவுன் ரூ.73,600க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜுன்.18) சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.122க்கும் ஒரு கிலோ ரூ.1,22,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.