சென்னை: தங்கம் விலை கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.3,000 வரை உயர்ந்தது. அதே நேரத்தில் 14ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. 15ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. கடந்த 16ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.74,440க்கும், 17ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 குறைந்து ஒரு பவுன் ரூ.73,600க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்துக்கு விற்றது. நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,265க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,120க்கும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.122க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,22,000க்கும் விற்பனையானது.
தங்கம் பவுனுக்கு ரூ.520 உயர்ந்தது
0