சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான பாஜக பிரமுகர் தேவநாதன் அலுவலகத்தில் 3 கிலோ தங்கத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் பறிமுதல் செய்தது. தேவநாதனின் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தி தங்கத்தை கைப்பற்றியது. நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.