மதுரை: மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: சொந்த நலனுக்காக அதிமுகவை எடப்பாடி பழனிசாமி பலவீனப்படுத்தி விட்டார் என டிடிவி.தினகரன் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகிறார். உங்கள் கப்பலில் ஓட்டை விழுந்திருக்கிறது. உங்கள் கப்பல் எப்போதும் மூழ்கலாம் என்று தெரிந்து கொண்ட தொண்டர்கள், நிர்வாகிகள் உங்களை விட்டு தப்பித்து பிழைத்தால் போதும் என்று வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அமமுக தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை காற்றிலே கரைகிற கற்பூரம் போல் கட்சி கரைத்து போய்க்கொண்டே இருக்கிறது. விரைவில் காணாமல் போகும். அதிமுகவினரை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆடு நனைகிறதென ஓநாய் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு பேசியுள்ளார்.
ஆடு நனைகிறதென ஓநாய் கவலைப்பட வேண்டாம் டிடிவிக்கு உதயகுமார் பதிலடி
0