சென்னை: தியாக திருநாளான ‘பக்ரீத்’ பண்டிகை வருகிற 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன் முக்கிய அம்சமாக, பக்ரீத் பண்டிகையன்று பலரும், ஆட்டை வெட்டி ‘குர்பானி’ கொடுப்பது வழக்கம். இந்த நிகழ்விற்காக, ஆடுகள் வாங்கி வருகின்றனர். பக்ரீத் பண்டிகை மற்றும் அதற்கு அடுத்த நாள் என 2 நாட்களும், ஆடுகள் அறுக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் இறைச்சி, உற்றார் உறவினர் ஏழை எளியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதற்காக சென்னையில் ரெட்டேரி, புளியந்தோப்பு, எம்.கே.பி.நகர் ஆகிய 3 இடங்களில் ஆடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு விற்பனை நடந்தது. இதுபோன்ற பண்டிகை நாட்களில் தேவையை பூர்த்தி செய்வதற்கதாக ஆந்திராவில் இருந்து ஆடுகள் கொண்டுவரப்பட்டு விற்பனை நடப்பது வழக்கம்.
அதன்படி நேற்று ஆந்திர மாநிலத்தில் இருந்து 75 சதவீதத்திற்கும் அதிகமான ஆடுகள் லாரிகளில் சென்னைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதேபோல சென்னையில் பல்வேறு இடங்களில் சிறு வியாபாரிகளும் விற்பனையில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில் 50 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து இறைச்சி வியாபாரிகள் கூறுகையில், “சென்னையில் மட்டும் 50,000 ஆடுகள் வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது. வழக்கமாக 10 கிலோ கொண்ட ஆடு ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டது. தற்ேபாது 8 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையாகியுள்ளது. ஆட்டின் எடையை ெபாறுத்து அதிகபட்சமாக ரூ.50,000 வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது. சுமார் ரூ.50 கோடிக்கு விற்பனையாகி இருக்கலாம்” என்றார்.