பனாஜி: கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிக்கர். மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது தலைமை மருத்துவ அதிகாரி நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி, திட்டியதோடு அவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார். ஆனால், பத்திரிகையாளர் ஒருவரின் தாய்க்கு அவசர சிகிச்சை பிரிவில் வைட்டமின் பி 12 ஊசி போட மறுத்த ஒரே காரணத்துக்காக அமைச்சர் இப்படி நடந்து கொண்டதாக டாக்டர்கள் சங்கம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தை கண்டித்து கோவா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை கோவா முதல்வர் பிமோத் சாவந்த் நிறுத்தி வைத்தார். இதற்கிடையே அமைச்சர் ரானே எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், நான் பேசிய கடுமையான வார்த்தைகளுக்காக டாக்டர் குட்டிகரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது மன்னிப்பை ஏற்க டாக்டர் குட்டிகர் மறுத்துவிட்டார். எச்சரித்துள்ளது.