புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவாவில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மபுசா நகரில் உள்ள நாய்க்குட்டிகள் வளர்க்கும் இடத்திற்கு சென்றார். அங்கிருந்த ஜாக் ரஸ்ஸல் டெரியர் என்ற இனத்தை சேர்ந்த 3 மாத நாய்குட்டியை வாங்கினார். அதனை தன்னுடன் விமானத்தில் டெல்லி எடுத்து வந்தார். மற்றொரு நாய் குட்டியையும் ராகுல் தேர்வு செய்துள்ளார். அந்தகுட்டி விரைவில் ராகுலுக்கு அனுப்பி வைக்கப்படும் .