மும்பை: கோவாவில் இருந்து புனே சென்ற விமானத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் இருந்து புனேவுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் கண்ணாடி அப்படியே பெயர்ந்து விழுந்தது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். விமானம் புனேயில் தரையிறங்கியதும் உடைந்து விழுந்த பகுதியில் புதிய கண்ணாடி ஜன்னல் பொருத்தப்பட்டது. இது பற்றி வேறு எந்த தகவலையும் ஸ்பைஸ்ஜெட் தெரிவிக்கவில்லை.
ஆனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி கழன்று விழுந்தது. இந்த விமானம் மீண்டும் ஜெய்ப்பூருக்கு செல்ல உள்ளது. இது வானில் பறக்க தகுதியானதா ? என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்பைஸ்ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ ஜன்னல் உடைந்து விழுந்ததால் பயணிகளின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.