தூத்துக்குடி: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், தமிழக அரசின் துரித நடவடிக்கையால் 5 மாதத்திற்குள் சென்னை மகளிர் நீதிமன்றத்தால் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது, பெண்களை இழிவாக கருதி மோகப் பொருளாக எண்ணும் சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும். பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்கள் இனி தைரியமாக புகார் கொடுக்க முன் வருவார்கள். பெண்கள் மத்தியில் இந்த தீர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
0