சென்னை: மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது என அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார். எந்த சலுகையும் வழங்கப்படாத வகையில் ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற்றது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தோம். ஞானசேகரன் 30 ஆண்டுகள் கண்டிப்பாக தண்டனையை அனுபவிக்க வேண்டும் என அவர் பேட்டியளித்தார்.
ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது: வழக்கறிஞர் மேரி ஜெயந்தி பேட்டி
0
previous post