சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2ல் ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு 8-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை உள்ளதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க ஞானசேகரன் கோரிக்கை வைத்துள்ளார். ஞானசேகரனுக்கு இரக்கம், கருணை காட்டக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி வாதிட்டார்.
ஜூன் 2ல் ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும்: நீதிபதி ராஜலட்சுமி
0
previous post