சென்னை: ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தமிழக அரசின் துரித நடவடிக்கையால் விரைவில் தீர்ப்பு கிடைத்துள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 வருடங்கள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
தமிழக அரசின் துரித நடவடிக்கையால் விரைவில் தீர்ப்பு: கீதா ஜீவன்
ஞானசேகரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சமூக விரோதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். தமிழக அரசின் துரித நடவடிக்கையால் விரைவில் தீர்ப்பு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – திருமாவளவன்
அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பும் நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்திருக்கிறது.
ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை – டி.டி.வி. தினகரன் வரவேற்பு
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.