சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக விவசாயத்திற்கு 23ம் தேதி வரை தினமும் 2,600 கன அடி காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை நிறைவேற்ற காவரி மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளின் தற்பொழுது உள்ள நிலையை ஆராய்ந்து உண்மை தன்மைக்கு ஏற்றவாறு ஆணையமே உரிய ஆலோசனை செய்து நேரடியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க காவிரி மேலாண்மை ஆணையம் மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.