சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:ஆவின் நிறுவனம் ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு புதிய ஆவின் டிலைட் பாலை அறிமுகம் செய்கிறது. ஆவின் பச்சை பாக்கெட் விற்பனை தொடரவேண்டும். ஆவின் நிறுவனம் புதிய ரக பால் பாக்கெட்டை அறிமுகம் செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு 3.5 சதவிகிதம் குறைந்த கொழுப்பு சத்துடைய டிலைட் பாலை 4.5 சதவிகிதம் கொழுப்பு சத்துடைய பச்சை நிற பாக்கெட் பாலை நிறுத்திவிட்டு அதே விலையில் விற்க முடிவு செய்திருப்பது மறைமுகமாக மக்களை ஏமாற்றும் செயல். ஆகவே ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் விற்பனை தொடர வேண்டும்.