சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்று, உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலியா அணியினருக்கு நல் வாழ்த்துக்கள், பாரட்டுக்கள். இந்திய கிரிக்கெட் அணி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியது பாராட்டுக்குறியது.
ஆட்டம் துவக்கம் முதலே இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆர்வத்துடன், முழு ஈடுபாட்டுடன் விளையாடி தங்கள் முழு பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள். இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடதக்கது. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது இயல்பு. வருங்காலங்களில் இந்திய விளையாட்டு வீரர்கள் கடுமையான பயிற்சியையும், முயற்சியையும் மேற்கொண்டு வெற்றிப்பெற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.