Monday, February 26, 2024
Home » பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வு தொகை பெறலாம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வு தொகை பெறலாம்

by Karthik Yash
Published: Last Updated on

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடம் வைப்புத் தொகை ரசீதுகள் பெற்று 18 வயது நிரம்பிய நிலையில் உள்ள பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற தங்களைச் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலத்தில் பணிபுரியும் சமூக நல அலுவலர்களிடம் ஆவணங்களை அளித்து பணப் பயன்களை பெறலாம். அதன்படி முதிர்வுத் தொகை பெறுவதற்கு, சேமிப்பு பத்திரத்தின் அசல் மற்றும் நகல், 10ம் வகுப்பு படித்ததற்கான மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (தாய், மகள்) கையொப்பத்துடன் ஒரு ரூபாய்க்கான அஞ்சல் வில்லை, வங்கிகணக்கு எண் விவரம் (பாஸ் புக் முதல் பக்க நகல்) ஆகிய ஆவணங்கள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் (2ம் தளம்), திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 044-29896049 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

You may also like

Leave a Comment

fourteen + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi