வேலூர்: மாணவிகள் முன் நிர்வாண போஸ் கொடுத்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்தவர் வினோத்(35). இவருக்கு திருமணமாகி, மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், வினோத் குடிபோதையில் பள்ளி மாணவிகளை பின்தொடர்ந்து சென்று ஆபாச பாட்டு பாடுவது, கேலி கிண்டல் செய்வது, ஆபாச சைகை காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவாராம்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளிக்கு நடந்து சென்ற அக்கா, தங்கையை போதையில் இருந்த வினோத் பின்தொடர்ந்து சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர்கள் முன் திடீரென ஆடைகளை அவிழ்த்து நிர்வாண போஸ் கொடுத்தாராம். மாணவிகளை உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. மாணவிகள் அலறியடித்து ஓடிச்சென்று பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் புகாரின்படி காட்பாடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து வினோத்தை தேடி வருகின்றனர்.